2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நந்தீஸ்வரர் உழவாரப்பணி என்பது நந்தீஸ்வரர் ஆலய உழவாரபணி சங்கமாக தமிழக அரசு பத்திர பதிவு துறையில் பதிவு செய்ய பட்டது அதன் பதிவு எண் 124/17 ஆகும் அதன் நிறுவனர் செயலாளர் ஆக நாகராஜன் என்ற என் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது இதன் தற்போதைய நிர்வாகிகள் D லோகநாதன் தலைவர் . S நாகராஜன் நிறுவனர் செயலாளர் மற்றும் R குமார் கிருஷ்ணன் பொருளாளராக உள்ளோம்.
எங்கள் நந்தீஸ்வரர் உழவாரப்பணி 7 .4 2011 அன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள நந்திவரம் கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள அருள்மிகு சௌந்தர்ய நாயகி உடனுறை நந்தீஸ்வரர் ஆலயத்தில் ஆரம்பிக்கப்பட்டது அப்போது அதன் உறுப்பினர்கள் 5 சிவனடியார்கள் மட்டுமே.
2017 ஆம் ஆண்டு நந்தீஸ்வரர் உழவாரப்பணி என்பது நந்தீஸ்வரர் உழவாரப்பணி சங்கம் என்ற பெயரில் தமிழக அரசில் பதிவு செய்யப்பட்டது அதன் நிறுவனர் செயலாளர் ஆக நாகராஜன் என்ற நான் உள்ளேன் சங்கமாக பதிவு செய்யப்பட்டவுடன் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒவ்வொரு சிவாலயங்களில் உழவாரப்பணி செய்கிறோம்.
2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் அருள்மிகு பாடலீஸ்வரர் ஆலயத்தில் எங்கள் 127 வது உழவாரப்பணி நடைப்பெற்றது வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று 128 வது உழவாரப்பணி சென்னை திருவொற்றியூர் அருள்மிகு வடிவுடை அம்மன் உடனுறை ஆதிபுரீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற உள்ளது.
இன்று எங்கள் நந்தீஸ்வரர் உழவாரப்பணியில் 500 க்கு மேற்பட்ட சிவனடியார்கள் உள்ளனர் இவர்களுக்கு காலை மதியம் உணவு மற்றும் இடைவேளை காபி தேநீர் ஆகியவை வழங்கப்படுகிறது இவை அனைத்தும் டொனேஷன் மூலமே பெறப்பட்டு நடைபெறுகிறது.
உழவார பணிக்கு வரும் சிவனடியார்களை ஆரம்பத்தில் இருந்து தனியார் வாகனங்கள் மூலம் அழைத்து சென்றோம் சமீப காலமாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை மூலம் பேருந்துகளில் அழைத்து செல்கிறோம் இதற்காக ஏற்பாடு செய்து கொடுத்த தமிழக மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கும் அவரது வழிகாட்டுதல்படி நடக்கும் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் மாண்புமிகு PK சேகர் பாபு அவர்களுக்கும் என் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்